``உள்ள கிடந்தது மிளகா இல்ல'' - சாம்பார் சாதம் சாப்பிடுபவர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி
சென்னையில் தனியார் உணவகத்தின் பார்சலில் கரப்பான் பூச்சி கிடந்ததாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த முருகன் என்பவர், தனது மனைவிக்கு உணவகம் ஒன்றில் சாம்பார் சாதம் பார்சல் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் காய்ந்த மிளகாய் உள்ளதாக நினைத்த அவர், பின்பு அதை கரப்பான் பூச்சி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, தொலைபேசி வாயிலாக முருகன் புகாரளித்துள்ளார்.
Next Story