ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவொற்றியூர் காலாடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை வசூலித்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

திருவொற்றியூர் காலாடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை வசூலித்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கிருபாகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக அறக்கட்டளை அமைக்கப்பட்டு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com