Chennai High Court காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு - கோர்ட் வரை சென்ற அவசர வழக்கு
காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு - கோர்ட் வரை சென்ற அவசர வழக்கு
எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையை இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் விடுவிக்கவும்,
ஒப்பந்தம் கோரிய 3,500 லாரிகளுக்கும் பணி அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.
இதனால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என கூறி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுப் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், எல்பிஜி கேஸ் அத்தியாவசிய பொருள் என்பதால், சட்டப்படி அதன் விநியோகத்தை நிறுத்துவது முரணானது என கூறியிருந்தார்.
இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
