பறக்கும் சாலை திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் - சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் பூந்தமல்லி-துறைமுகம் இடையே பறக்கும் சாலைத் திட்டத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், மதுரவாயலில் இருந்து கோயம்பேடு செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதால், சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மாற்றுப் பாதையை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
