"நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
"நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற கூடுதலாக 200 படுக்கை வசதியுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரிவையும் அவர் பார்வையிட்டார். இதனைத் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் அமைச்சர் பார்வையிட்டார். நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்போது அமைச்சர் மருத்துவர்களை கேட்டுக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com