மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற சென்னை ஜிம் மாஸ்டர் திடீர் மரணம் - மனம் கலங்கி ஓடிவந்த மாணவர்கள்
மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் மணிகண்டன். மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற இவர், ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, ஒப்பந்த பணி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள், நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
Next Story
