நிலத்தடி நீர் உறிஞ்சுவதில், புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும்- சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

நிலத்தடி நீர் திருட்டை தடுக்கும் வகையில் புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலத்தடி நீர் உறிஞ்சுவதில், புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும்- சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
Published on

நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக் கோரி இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறிய நீதிபதிகள் தொடர் நிலத்தடி நீர் திருட்டால் எதிர்காலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்றனர். இது நீடிக்கக் கூடாது என்ற நீதிபதிகள் நிலத்தடி நீர் எடுப்பதில் புதிய வழிமுறைகளை தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும் வணிக நோக்கத்திலா இலவசமாக வழங்கவா என கண்காணித்து பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார். இனிமேலாவது தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்ற அவர்கள், அனைத்து ஆழ்துளை கிணறு உரிமத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com