சென்னையில் வாகன சோதனையில் ரூ.1.5 கோடி பிடிபட்ட சம்பவம் : பிரபல நிறுவனத்தின் இயக்குநருக்கு பணம் சொந்தம்

சென்னையில் வாகன சோதனையில் பிடிபட்ட ஒன்றரை கோடி ரூபாய் பாலசுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் வாகன சோதனையில் ரூ.1.5 கோடி பிடிபட்ட சம்பவம் : பிரபல நிறுவனத்தின் இயக்குநருக்கு பணம் சொந்தம்
Published on

சென்னை கோட்டூர்புரம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த ஒரு பையை தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றனர். பையை சோதனை செய்த போது, அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கட்டு கட்டாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பாலசுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. பாலசுப்ரமணியம் ஹைதராபாத்திற்கு சென்றிருந்த போது, வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில், வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com