Chennai | Fire Accident | அண்ணா நகரில் தீ விபத்து..போராடிய தீயணைப்பு துறை..
சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் அருகே உள்ள ஜூஸ் கடை ஒன்றில், ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அடுத்தடுத்து நான்கு கடைகளும் பற்றி எரிந்தன.
ஜூஸ் கடையில் உள்ள சமையல் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் மளமளவென தீப்பற்றிய நிலையில், கடையின் உரிமையாளர்கள் தப்பி ஓடியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Next Story
