கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து இருவர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி
சென்னை பாண்டி பஜாரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் , திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் , திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு பழுதான பழைய சேமிப்பு டேங்கை மாற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், குழாய்களை வெல்டிங் செய்த போது தீப்பொறி பட்டு , தீப்பிடித்தது. அப்போது பணியில் இருந்த குமார் , சேகர் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயண பொடியை தூவி தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது,
