

சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு சென்ற மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேரை உள்ளே வரச்சொன்ன ஓட்டுனர் மணிகண்டனை அவர்கள் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டார் . இதனால் திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.