என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் உருவ படத்திற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ அஞ்சலி

சென்னையில், சமீபத்தில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் உருவ படத்திற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் உருவ படத்திற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ அஞ்சலி
Published on
சென்னையில் ரோந்து பணிக்குச் சென்ற காவலர் ராஜவேலுவை தாக்கிய ஆனந்தன் என்ற ரவுடி கடந்த 3ஆம் தேதி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரவுடி ஆனந்தன் இல்லத்தில் இறுதி காரிய நிகழ்ச்சி நடந்தது. அதில், விருகம்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டு ஆனந்த் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஆனந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com