சென்னையில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர்கள் பலி

சென்னை சவுகார்பேட்டையில், மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள், பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர்கள் பலி
Published on

ஆவுடையப்பன் தெருவில் உள்ள மின்மாற்றியில் பராமரிப்பு பணி காரணமாக சவுகார்பேட்டை மின்வாரிய ஊழியர்கள் உதயா மற்றும் வின்சென்ட் ஆகிய இருவரும் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் பாய்ந்ததில் உதயா தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து பலியானார். வின்சென்ட் மின்மாற்றியிலேயே மாட்டிக்கொண்டு பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்தனர் . மின்சாரத்தை நிறுத்த தாமதம் ஏற்பட்டதால், உடல் மின்மாற்றியிலேயே தொங்கிய நிலையில் காணப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் மின்சாரத்தை துண்டித்து கயிறு கட்டி அவரது உடலைக் கீழே இறக்கினர் இருவரது உடலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொத்தவால்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com