Chennai | Drugs | சென்னையை நாசக்கேடாக மாற்ற நினைத்த கும்பல் - போலீசார் அதிரடி

x

கஞ்சா, வலி நிவாரண மாத்திரைகள் விற்க முயன்ற 8 பேர் கைது

சென்னை புளியந்தோப்பில், வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

புளியந்தோப்பை சேர்ந்த சுகுனேஷ், சூர்யா, எடிசன் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 110 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் சுமார் இரண்டரை கிலோ கஞ்சா, 5 சிரஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுகுனேஷ், சூர்யா உள்ளிட்டோர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்