Chennai Double Decker Bus| 18 ஆண்டுகளுக்கு பின் சென்னை சாலைகளில் சீற போகும் டபுள் டக்கர் பஸ்கள்

Chennai Double Decker Bus| 18 ஆண்டுகளுக்கு பின் சென்னை சாலைகளில் சீற போகும் டபுள் டக்கர் பஸ்கள்

18 ஆண்டுகளுக்கு பின் சென்னை சாலைகளில் சீற போகும் டபுள் டக்கர் பஸ்கள்.. எந்த ரூட்.. எவ்வளவு டிக்கெட்.. அரசு கையில்

சென்னையில் மீண்டும் வலம் வர உள்ள டபுள் டக்கர் பேருந்துகள் ஒரு காலத்தில் சென்னை சாலைகளில் வலம் வந்த டபுள் டக்கர் பேருந்துகள், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை மாடி பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது. 1970-களில் அறிமுகமான இந்த பேருந்துகள், மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் 2008-ல் நிறுத்தப்பட்டன. தற்போது பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சுற்றுலா பயன்பாட்டுக்கும் இந்த பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் ஓட்டுநர், நடத்துநர் நியமனம் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. வழித்தடம் மற்றும் கட்டண நிர்ணயம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com