Chennai Doctors | இளைஞருக்கு கைகொடுத்த 14 மணிநேர போராட்டம் | இந்தியாவில் முதன் முறையாக சாதனை
அரியவகை கைமாற்று அறுவை சிகிச்சை- அரசு மருத்துவர்கள் சாதனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வடமாநில இளைஞருக்கு அரியவகை கை மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
பீகாரை சேர்ந்த 28 வயது இளைஞர் ரயிலில் அடிபட்டு கையை இழந்த நிலையில், இடது கையின் ஒரு பகுதியை எடுத்து வலது கையில் பொருத்தி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். 14 மணிநேரம் 3 மருத்துவக் குழுக்களால் நடைபெற்ற இந்த சிகிச்சையானது, இதற்கு முன் அமெரிக்காவில் 2 பேருக்கும், இந்தியாவில் முதன்முறையாகவும் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story
