Chennai | தாயை திட்டிய நபரை கட்டையால் அடித்தே கொன்ற மகள் - 2 மாதம் கழித்து வெளிவந்த அதிர்ச்சி உண்மை
தாயை திட்டிய நபரை கட்டையால் அடித்தே கொன்ற மகள் - 2 மாதம் கழித்து வெளிவந்த அதிர்ச்சி உண்மை
தாயை திட்டிய நபரை கட்டையால் அடித்தே கொன்ற மகள் - 2 மாதம் கழித்து வெளிவந்த அதிர்ச்சி உண்மை சென்னையில் எலக்ட்ரீசியன் கொலை வழக்கில், பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த வழக்கில், இரண்டு மாதங்களுக்கு பிறகு பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற சிவகுமார் எலக்ட்ரீசியன் வேலையை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி குடிபோதையில் தனது தாயை திட்டியபோது, காவியா என்ற 23 வயதுடைய பெண் கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சங்கர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
