Chennai Crime | கணவனின் அசிங்க செயல்.. கோபித்துக்கொண்டு சென்ற மனைவியின் கதையை முடித்த கொடூர கணவன்

Chennai Crime | கணவனின் அசிங்க செயல்.. கோபித்துக்கொண்டு சென்ற மனைவியின் கதையை முடித்த கொடூர கணவன்

Chennai Crime | கணவனின் அசிங்க செயலை கண்டுபிடித்த மனைவி.. கோபித்துக்கொண்டு சென்ற மனைவியின் கதையை முடித்த கொடூர கணவன் - சென்னையில் பகீர் சம்பவம் சென்னையில் காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்... சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி சிவா என்பவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணுடன் சிவாவுக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. அவர்களது நெருக்கமான படங்களைப் பார்த்து வெண்ணிலா கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வெண்ணிலா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த 10-ஆம் தேதி வெண்ணிலாவின் அக்கா வீட்டிற்குச் சென்ற சிவா, மீண்டும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார். அதற்கு வெண்ணிலா மறுக்கவே, ஆத்திரமடைந்த சிவா மறைத்து வைத்திருந்த கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி. நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். வடமாநில தொலைபேசி எண் மூலம் நண்பரைத் தொடர்புகொண்ட சிவாவை, வியாசர்பாடி பகுதியில் வைத்து காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் காதலால் மனைவியைக் கொன்ற கணவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com