Chennai | Crime | பிளாட்பார்மில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்ற நபர்
ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுமி கடத்தல்
கடத்திய நபரை கைது செய்து, சிறுமியை மீட்ட போலீசார்
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய பிளாட்பார்மில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்றவரை கைது செய்த போலீசார் குழந்தையை மீட்டனர்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநில தம்பதியின் எட்டு வயது சிறுமியை நேற்று இரவு மர்ம நபர் தூக்கி சென்றுள்ளார்.
குடிபோதையில் குழந்தையை தூக்கிக்கொண்டு வால் டாக் சாலையில் நடந்து சென்ற நபரை ஆட்டோ டிரைவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விசாரித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் எட்டு வயது சிறுமியை தூக்கிச் சென்றது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சேர்ந்த சசிகுமார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
