கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் மாயம் - உணவகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்

சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகத்தை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் மாயம் - உணவகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
Published on

சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகத்தை மூடி, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த உணவகத்தில் பணி புரிந்ததாக கூறப்படும் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மாயமாகியுள்ளார். இந்நிலையில், அவர் இங்கு பணி புரியவில்லை என ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், கட்டுப்பாடு அறையுடன் அவர் பேசிய ஆடியோவை வைத்து, உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com