சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு
சென்னையில் கிடப்பில் உள்ள சாலை பணிகளை பருவமழைக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை பணிக்காக 2,221 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததில்1,692 கோடி ரூபாய்க்கு மட்டுமே பணிகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 18,895 சாலைகள் சீரமைக்க திட்டமிட்டிருந்த நிலையில் 17,569 சாலைகள் மட்டுமே மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த மாநகராட்சி நிர்வாகம், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2 ம் கட்ட பணிகளாலும், குடிநீர் வாரியம், மின்வாரியம் முன் அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டுவதால் திட்டமிட்டபடி சாலைகளை சீரமைப்பது சவாலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகளையும் வரும் பருமழைக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
