Chennai Corporation School| சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்களை திருப்பும் ஆசிரியர்கள்
Chennai Corporation School| சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்களை திருப்பும் ஆசிரியர்கள்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் மாணவர் சேர்க்கையை 7 ஆயிரமாக உயர்த்த மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சேர்க்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
