கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட சென்னை மாநகராட்சி ஆணையர்

x

கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட சென்னை மாநகராட்சி ஆணையர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டதால், அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2021 ஆண்டில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் தொடர்ந்த வழக்கு காரணமாக, ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்தால், மீண்டும் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜராகி நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை நீதிபதி திரும்பப் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்