சென்னையில் புதிதாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட சில முக்கிய இடங்கள்

சென்னையில் புதிதாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட சில முக்கிய இடங்களை பார்க்கலாம்..
சென்னையில் புதிதாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட சில முக்கிய இடங்கள்
Published on

ஏழுகிணறு, வண்ணாரப்பேட்டை , சவுக்கார்பேட்டை உள்ளிட்ட ராயபுரம் மண்டலத்தில் பல பகுதிகளில் 45க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்டேரி,புளியந்தோப்பு,அயனாவாரம் உட்பட திருவிக நகர் மண்டலத்தில் 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முத்தமிழ் நகர்,கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், உட்பட தண்டையார்பேட்டை மண்டலத்தில் 35 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயப்பேட்டை,திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பகுதி, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி,மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை உள்ளிட்ட கோடம்பாக்கம் மண்டலத்தில் 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com