100வது நாளை எட்டிய கொரோனா - எப்போது முடியும் என எதிர்பார்ப்பு

தமிழகத்தில், கொரோனா பரவல் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது.
100வது நாளை எட்டிய கொரோனா - எப்போது முடியும் என எதிர்பார்ப்பு
Published on

தமிழகத்தில், கொரோனா பரவல் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. கடந்த 3 மாதமாக தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்து வரும், இந்த கொரோனா வைரஸ், மக்கள் அடர்த்தி மிகுந்த வடசென்னை பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நோய்த் தொற்றை தடுக்க மண்டலம் வாரியாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வேலை வாய்ப்புத்தேடி சென்னை வந்தவர்கள் எல்லாம், ஊரடங்கால் வேலை இழந்து... வருமானம் இழந்து... சொந்த ஊருக்கு சென்று விட்டனர். பலர் உயிர் பிழைத்தால் போதும் என சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். ஆனாலும் அனைவரது எதிர்பார்ப்பும், கொரோனா தொற்று பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்ற ஒற்றை எதிர்பார்ப்பிலேயே உள்ளது

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

X

Thanthi TV
www.thanthitv.com