சென்னை கமிஷனரின் `100 நாள்’ ஆர்டருக்கு எதிர்ப்பு - ஆம்னி ஓனர்கள் அறிக்கை
சென்னை கமிஷனரின் `100 நாள்’ ஆர்டருக்கு எதிர்ப்பு - ஆம்னி ஓனர்கள் அறிக்கை
சென்னை காவல் ஆணையரின் '100 நாள்' ஆர்டருக்கு - கடும் எதிர்ப்பு
விபத்து நடந்த உடனே கனரக வாகனங்கள் மட்டுமே குற்றவாளிகள் என்று முடிவு செய்வது தவறான முன் உதாரணமாகும் என ஆம்னி பேருந்து ஓனர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்த அறிக்கையில், விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை, 100 நாட்களுக்கு திருப்பி ஒப்படைக்கக் கூடாது என்ற சென்னை காவல் ஆணையரின் உத்தரவு, பேருந்து உரிமையாளர்களுக்கும், பயணிகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும். விபத்து ஏற்பட்டால், தங்களது தரப்பிலும் பெரிய பாதிப்புகளை சந்திப்பதை கருத்தில் கொண்டு, பல வகையிலும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆகவே, இதுகுறித்த உத்தரவை ரத்து செய்து, பறிமுதல் செய்த வாகனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
