Chennai | College Student | பஸ் மீது கல்வீசி கண்ணாடியை நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்..சென்னையில் பரபரப்பு

x

மாநகரப் பேருந்து மீது கல்வீச்சு - கல்லூரி மாணவர் கைது

சென்னை ராயப்பேட்டையில், மாநகர பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கல்லூரி மாணவனை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நந்தனம் கல்லூரி மாணவர்களை தாக்கும் நோக்கத்தில், புதுக்கல்லூரி மாணவர்கள் பேருந்து மீது கற்களை வீசியதில்,

கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், அளித்த புகாரின் பேரில், 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அண்ணா சாலை போலீசார், கொளத்தூரை சேர்ந்த ஆன்ரோ என்ற மாணவனை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 9 மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்