தங்கையை காதலித்ததால் கல்லூரி மாணவர் குத்திக் கொலை - அண்ணன் ஆத்திரம்

சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கையை காதலித்ததால் கல்லூரி மாணவர் குத்திக் கொலை - அண்ணன் ஆத்திரம்
Published on
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சவன்குமார் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடித்து வெளியே வந்த சவன்குமாரை, சக மாணவர் ஒருவர் தடுத்து நிறுத்தி அவரை தாக்கியுள்ளனர். அப்போது அவர் கத்தியால் குத்தியதால் மாணவன் சவன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், சண்முகம் என்ற மாணவர் சவன்குமாரை குத்தி கொன்று தெரியவந்தது. அவரை மடக்கி பிடித்த சக மாணவர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். தனது தங்கையை சவன்குமார் காதலித்ததால், அவரை சண்முகம் கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com