அட்டகாசம் செய்த சென்னை காலேஜ் பாய்ஸ் - நொறுங்கிய பொதுமக்கள் சொத்து
சென்னையில் அரசுப்பேருந்து கண்ணாடி மீது கல்லை வீசிய கல்லூரி மாணவர்களின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் நிறைய கல்லூரி மாணவர்கள் பயணித்தனர். பேருந்தானது சத்யம் திரையரங்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த நியூ கல்லூரி மாணவர்களுக்கும், பேருந்துக்குள் இருந்த கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சாலையில் இருந்த நியூ கல்லூரி மாணவர்கள், அரசுப்பேருந்தின் மீது கல்லை எறிந்து விட்டு தப்பி ஓடினர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
Next Story
