13 வயது சிறுமி கழுத்து அறுத்து கொலை - தலைமறைவான உறவினருக்கு வலை

சென்னைஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தலைமறைவான அத்தை மகனை, போலீசார் தேடி வருகின்றனர்.
13 வயது சிறுமி கழுத்து அறுத்து கொலை - தலைமறைவான உறவினருக்கு வலை
Published on

ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வேதவல்லி. இவரது தம்பி பூபதி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், அவரது மகள் 13 வயதான ஷோபனாவை வளர்த்து வந்தார். ஷோபனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேதவல்லி வழக்கமாக ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனிடையே, அத்தை வீட்டில் உள்ள தங்கையை பார்க்க, ஷோபாவின் சகோதரி மோனிஷா வந்துள்ளார். அப்போது. ஷோபான மயக்க நிலையில் படுத்திருந்ததை கண்டு அத்தைக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த வேதவல்லி, ஷோபனா, கழுத்து, கை, இடுப்பு, தொடை பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஷோபனாவை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷோபனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com