கேரட் சாப்பிட்டதும் மயங்கி விழுந்து பலியான 2 வயது குழந்தை.. பெற்றோர்களே உஷார்.. சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் கேரட் சாப்பிட்டதால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொருக்குப்பேட்டையில் உள்ள பாட்டி இல்லத்தில் திடீரென மயங்கி விழுந்த குழந்தை லத்திஷாவை பெற்றோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதனிடையே, தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்