Chennai | ஆதார் இல்லாததால் ஏர்போர்ட்டில் குழந்தைக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகளை ரவுண்டு கட்டிய தாய்

x

குழந்தைக்கு ஆதார் இல்லாததால் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் பெண் வாக்குவாதம்

குழந்தைக்கு ஆதார் கார்டு இல்லை என்பதால், சென்னை விமான நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்த சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுடன் பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பெண், கோவை செல்வதற்காக விமான நிலையம் வந்தபோது அவரது குழந்தையின் ஆதார் அட்டையை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் கேட்டனர். அவரிடம் கையில் ஆதார் இல்லாததால் செல்போனில் டவுன்லோடு செய்வதில் காலதாமதம் ஆகியிருக்கிறது. இதனால் அந்தப் பெண் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுடன் வாக்குவாதம் செய்த நிலையில், விமானத்தை தவறவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்