அடுக்கு மாடி குடியிருப்பில் அலறிய பெண் | சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு மாவுக்கட்டு

x

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த நபர் தப்பியோட முயன்றபோது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவுக்கட்டு போடப்பட்டது. சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணிடம் இளைஞர் செயின் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்த போது தப்பி ஓட முயன்று தடுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்