

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சாந்தி நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 25 சவரன் டாலர் சங்கிலியை பறித்து சென்றனர். தடுக்க முயன்ற சாந்திக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.