சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒடிசாவை சேர்ந்த தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒடிசாவை சேர்ந்த தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரிசாவை சேர்ந்த ராம்சிங் என்பவர், மனைவி மற்றும் 3 வயது ஆண் குழந்தை சோம்நாத் ஆகியோருடன் நேற்றிரவு சென்ட்ரல் ரயில்நிலையம் வந்துள்ளார். அங்கேயே மூவரும் தூங்கிய நிலையில், இன்று அதிகாலை குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து ராம்சிங் அளித்த புகாரின் பேரில், ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், அந்த குழந்தையை கடத்தி செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com