Chennai Car Accident | மூதாட்டிகள் மீது அசுரவேகத்தில் வந்து மோதிய கார் - துடிதுடித்து நின்ற மூச்சு..

சென்னை தேனாம்பேட்டையில் சாலையில் நின்று கொண்டு இருந்த மூதாட்டிகள் மீது அசுரவேகத்தில் வந்த கார் ஒன்று மோதியதில் ஒரு மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரானது தண்ணீர் லாரியில் மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த 72 வயது செல்லம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், நாகரத்தினம் என்பவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, கார் ஓட்டுனர் லோகநாதனை கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com