சென்னையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரபேட்டை ஸ்டான்லி நகரில் குடியிருப்பு அருகே நின்ற ஆட்டோவை சோதனையிட்ட போலீசார், அதில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கொருக்குபேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபியை கைதுசெய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.