

சென்னை தரமணி பகுதியில் ஐஐடி உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த அரவிந்த் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீசார், அவன் அளித்த தகவலின் பேரில், கமலக்கண்ணன், லிண்டன் டோனி, ஆகிய இருவரை கைது செய்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.