Chennai | BWC | CISF | கவனத்திற்கு..! "புதிய முறை அமல்.."
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளை சோதனையிடும் சுங்க அதிகாரிகள், சோதனையின்போது, "பாடி ஒர்ன் கேமரா" Body Worn Camera அணிந்திருக்க வேண்டும் என்ற புதிய முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சோதனையின்போது பிரச்சனை ஏற்பட்டதாக புகார்கள் வந்தால், உயர் அதிகாரிகள் இந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் பெங்களூருவுக்கு அடுத்ததாக, சென்னையில் அறிமுகமான இந்த திட்டம், ஹைதராபாத், விஜயவாடா, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
