தொழிலதிபரை கடத்தி ஹவாலா பணம் கொள்ளையடிப்பு - ஏழு பேரை கைது செய்தது காவல்துறை

சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர், கடந்த 17ஆம் தேதி கடத்தப்பட்டதாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தொழிலதிபரை கடத்தி ஹவாலா பணம் கொள்ளையடிப்பு - ஏழு பேரை கைது செய்தது காவல்துறை
Published on
சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர், கடந்த 17ஆம் தேதி கடத்தப்பட்டதாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் தவ்பிக் என்பவரும் அவரது கூட்டாளிகளும், தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி, அக்பரை கடத்தியது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தவ்ஃபீக் அவரது மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தவ்பீக் மற்றும் திவான் அக்பர் இருவர் இடையே ஹவாலா பணப் பரிமாற்ற தொழில் போட்டி நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இதனால் அக்பரை கடத்தி இரண்டு கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இவர்களை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தவ்பீக் கூட்டாளிகள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில், 3 கோடி ரூபாய் செம்மர கட்டை கடத்தல் விவகாரத்திலும் திவான் அக்பருக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com