சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கம் - பேருந்துகளில் தனி மனித இடைவெளி இல்லை என புகார்

சென்னையில் 200 பேருந்து இயக்கப்பட்டு வந்த சூழலில் மேலும் 30 பேருந்து கூடுதலாக இயக்கப்படுகின்றன.
சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கம் - பேருந்துகளில் தனி மனித இடைவெளி இல்லை என புகார்
Published on

சென்னையில் 200 பேருந்து இயக்கப்பட்டு வந்த சூழலில், மேலும் 30 பேருந்து கூடுதலாக இயக்கப்படுகின்றன. அவசர கால, அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் என அனைவரும் பணிக்கு சென்று வர ஏதுவாக 200 பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மேலும் 30 பேருந்துகளை கூடுதலாக இயக்குகிறது. குறிப்பாக, தலைமைச் செயலகம் உட்பட முக்கிய அரசு துறைகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, பல பேருந்துகளில் அதிகளவில் ஊழியர்கள் பயணிப்பதால், தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com