Chennai || சகோதரிக்காகஎந்த எல்லைக்கும் செல்லும் சகோதரன்.. சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை அண்ணாநகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஹோட்டல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தன்று அதிகாலை முகமுடி அணிந்து வந்த மர்ம நபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்து, பாதியில் தப்பியோடினார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில், ஹோட்டலில் பணியாற்றும் ராம்குமார் என்பவர் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சகோதரி திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க, யூடியூப் பார்த்து கொள்ளையடிக்கச் சென்றதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்