புத்தக கண்காட்சியில் அலை மோதும் வாசகர்கள் கூட்டம் : 60, 61-வது ஸ்டால்களில் 'தினத்தந்தி' அரங்கு அமைப்பு

விடுமுறை தினத்தையொட்டி குடும்பத்துடனும், நண்பர்களுடனும், புத்தக கண்காட்சிக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
புத்தக கண்காட்சியில் அலை மோதும் வாசகர்கள் கூட்டம் : 60, 61-வது ஸ்டால்களில் 'தினத்தந்தி' அரங்கு அமைப்பு
Published on

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 42 வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சியில் 820 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. சனிக்கிழமை விடுமுறை என்பதால், மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதில் 60 மற்றும் 61- வது ஸ்டால்களில் 'தினத்தந்தி' அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 'வரலாற்று சுவடுகள்', 'ஆயிரம் ஆண்டு அதிசயம் உள்பட 53 புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. தினத் தந்தி அரங்கில் 10 சதவீத தள்ளுபடி விலையில் கிடைப்பதால், வாசகர்கள் ஆவலுடன் வாங்கி வருகின்றனர்.

மேலும் தினத் தந்தி அரங்கில் சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம்', 'தமிழ் சினிமா வரலாறு', 'ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு' உள்ளிட்ட 3 புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com