Chennai Bike Theft | Police | சென்னை மக்களை பதற்றத்திலே வைத்திருந்த சிறுவன் சிக்கினான்

x

சென்னை திருவல்லிக்கேணியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கிருபானந்தன் கடந்த 27ஆம் தேதி தனது வீட்டருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.மறுநாள் வந்து பார்த்தபோது டூவீலர் காணாமல் போன நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிலர் இரவில் நோட்டமிட்டு கள்ளச்சாவி போட்டு வாகனத்தை திருடுவது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் சிறுவனை கைது செய்தனர். விசாரணையில் நுங்கம்பாக்கம், வேப்பேரி, உள்ளிட்ட 4 இடங்களில் இரவு நேரங்களில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்