சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 158 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முக்கிய சாலையில் பைக் பந்தயத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார், 24ந் தேதி சிறப்பு சோதனை மேற்கொண்டனர். இதில் அதிவேகமாக பைக்கில் சென்ற 126 பேர் முதல் தகவல் அறிக்கையும், 32 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.