இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி
Published on

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த ஆறுமுகம், எழும்பூர் பழைய கமிஷனர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. அதில் ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக் மீது இடித்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆறுமுகம் தாம் வைத்திருந்த தலைக்கவசத்தை அணியாததால், உயிரிழந்தார் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com