பகலில் பியூட்டி பார்லர்.. இரவில் பாலியல் தொழில் - சென்னை சிட்டியில் ஷாக்

சென்னை போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் தினேஷ் என்பவர் பியூட்டில் பார்லர் நடத்தி வந்துள்ளார். இங்கு, மறைமுகமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக பார்லருக்கு விரைந்து சோதனை நடத்திய போலீசார், அங்கு பாலியல் தொழில் நடைபெற்றதை உறுதி செய்த நிலையில், தினேஷை கைது செய்தனர். தொடர்ந்து, பார்லரில் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி 6 பெண்களை மீட்ட போலீசார், அனைவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை குறி வைத்து, பார்லரில் வேலை வாய்ப்புத் தருவதாக கூறி, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com