வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள் - அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து பலியான பெண்

x

சென்னை முகப்பேர் அருகே வீட்டை ஜப்தி செய்யும்போது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எபினேசர் அவென்யூவில் வசிப்பவர் இன்பராஜ்... இவர் கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை வசூலிக்கும் விதமாக, இவரது வீட்டை ஜப்தி செய்ய வங்கி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது இன்பராஜின் தாய் கீதா அதிர்ச்சியில் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக நொளம்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்