

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அப்பு என்பவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மெர்சி என்பவருடன் வெளியே சென்றுள்ளார். வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை அருகே ராட்ச கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த நிலையில் திடீரென கால் தடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனையில் அப்பு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.