மாணவியை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் கைது

சென்னை ஆவடியில் சட்டக்கல்லூரி மாணவியை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய முகநூல் காதலனை போலீசார் கைது செய்தனர்.
மாணவியை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் கைது
Published on

சென்னை ஆவடியில் சட்டக்கல்லூரி மாணவியை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய முகநூல் காதலனை போலீசார் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி முகநூல் மூலம் அத்திப்பட்டு, கலைவாணர் நகரை சேர்ந்த லாரன்ஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறி லாரண்ஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சேர்ந்து வாழ்ந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவி லாரன்ஸிடம் கூறியுள்ளார். அப்போது லாரன்ஸ் திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து லாரன்ஸ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சட்டக்கல்லூரி மாணவி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரன்ஸை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com